கருமாரம்பாளையம்
மாநகராட்சி பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக பேனர்
வைத்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில்
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில், பிரசாரம் மேற்கொள்ள, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரமான கல்வி
வழங்கவும், பள்ளியில் வசதியை மேம்படுத்தவும், பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்னும் 2 மாதங்களில், நடப்பு கல்வியாண்டு நிறைவடைய
உள்ளது; வரும் கல்வியாண்டில் மாணவர்
சேர்க்கையை தீவிரப்படுத்தும் முயற்சியை, இப்போதே சில பள்ளிகள்
கையில் எடுத்துள்ளன.திருப்பூர் கருமாரம்பாளையம் மாநகராட்சி முன் வைக்கப்பட்டுள்ள பேனரில்,
முதலாம் வகுப்பு முதல் 8ம்
வகுப்பு வரை தமிழ் வழியிலும்;
1, 2 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஆங்கில
வழியிலு<ம் மாணவர் சேர்க்கை
நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், "முப்பருவ கல்விமுறை, தனித்தனி வகுப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,
அனுபவமிக்க ஆசிரியர்கள், கணினி, யோகா, ஓவிய
வகுப்பு, விளையாட்டு பயிற்சி என கட்டணமில்லாமல்
அனைத்தும் தரமாக கற்பிக்கப்படுகிறது; விரைந்து
வாரீர்,' என, மாணவர் சேர்க்கைக்கு
அழைப்பு விடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர் உமா சாந்தியிடம் கேட்ட
போது,""மாநகராட்சி பள்ளி இருப்பது தெரியாமல்,
இப்பகுதி பெற்றோர் சிலர், தனியார் பள்ளிகளில்
குழந்தைகளை சேர்க்கின்றனர். மாநகராட்சி பள்ளியிலேயே சிறந்த கல்வி அளிக்கப்படும்
என்பதை தெரிவிக்கவே, முன்னதாகவே பேனர் வைத்து, அறிவிப்பு
செய்துள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி