நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் சமையல் கியாஸ்சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைப்பா? இந்தியன் ஆயில் தலைமை தொடர்பு மேலாளர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் சமையல் கியாஸ்சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைப்பா? இந்தியன் ஆயில் தலைமை தொடர்பு மேலாளர் விளக்கம்


மத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை இணைப்பு நிறுத்திவைக்கப்படுகிறதா என்பதற்கு இந்தியன் ஆயில் கழகத்தின் (ஐ.ஓ.சி.) தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றி செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம்

மத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் (எல்.பி.ஜி.) நேரடி மானிய திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களது வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நுகர்வோர்களுக்கு, சிலிண்டர் ஏஜென்சிகள் எச்சரிக்கை விடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து இந்தியன் ஆயில் கழகம் (ஐ.ஓ.சி.) தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றி செல்வகுமாரிடம் கேட்டபோது, அவர் விளக்கமளித்து கூறியதாவது:-

74.1 சதவீதம் இணைப்புகள்...

தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரத்து 65 பேர் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் 89 லட்சத்து 67 ஆயிரத்து 403 பேர் இந்தியன் ஆயில் கழகத்திலும் (ஐ.ஓ.சி.), 38 லட்சத்து43 ஆயிரத்து 134 பேர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திலும், 22 லட்சத்து 30 ஆயிரத்து 528 பேர் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திலும் இணைப்பை பெற்றுள்ளனர்.மத்திய அரசு நேரடி மானிய திட்டத்தில் 18-ந் தேதி நிலவரப்படி (நேற்று வரை)மொத்தம் 74.1 சதவீத இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் ஆயில் கழகத்தில் 73.76 சதவீத வாடிக்கையாளர்களும், பாரத் பெட்ரொலிய நிறுவனத்தில் 73.63 சதவீத வாடிக்கையாளர்களும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் 76.24 சதவீத வாடிக்கையாளர்களும் இதுவரை இணைந்துள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.43 சதவீத வாடிக்கையாளர்களும், குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 68.56 சதவீத வாடிக்கையாளர்களும் நேரடி மானிய திட்டத்தில் சேர்ந்துள்ளனர். சென்னையில் 71.42 சதவீத வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

கருணை காலம்

சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து மார்ச் 31-ந் தேதி வரை கருணை காலம் ஆகும்.இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும். கருணை காலம் முடிவடைவதற்குள் மானிய திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, வினியோகிப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டுவிடும். கருணை காலத்திலும் மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானிய தொகை எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.ஜூலை 1-ந் தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும்.

சப்ளை நிறுத்தி வைப்பா?

மானியம் பெற விரும்பாத நுகர்வோர்களுக்கு தொடர்ந்து சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். எனவே மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களது வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைக்கப்படும் என்று வெளியாகிஉள்ள தகவல் வதந்தி தான்.அதனை யாரும் நம்ப வேண்டாம். நுகர்வோர்களை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் ஆயில் நிறுவனங்கள் எடுக்காது. சமையல் கியாஸ் சிலிண்டர் பெயர் மாற்றம் செய்வது தற்போது சுலபமாக்கப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்களுடன்சிலிண்டர் ஏஜென்சிக¬ ள அணுகினால் உடனே சமையல் கியாஸ் இணைப்பு மாற்றம் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி