மத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு: பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு: பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு


மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.இதில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரி சலுகை, வேலை வாய்ப்பு திட்டங்கள், வேளாண்மைத்துறைக்கு சலுகைகள் போன்றவையும் எதிர்பார்க்கப்படுகின்றன.
பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். மாநில அரசுகளும் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன.பல்வேறு கருத்துக்கள், பரிந்துரைகள் அடிப்படையில் பொது பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 7–வது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில், ‘அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித்திறமைக்கு ஏற்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசுகளுக்கு பொதுவான கவுன்சில் அமைக்க வேண்டும். ஊழியர்களின் ஊதியம் மற்றும் இதர படிகள் குறித்து பொதுவான தேசிய கொள்கை உருவாக்க வேண்டும்என்று நிதி ஆணையம் கூறியுள்ளது.

இதன் அடிப்படையில், ‘மத்திய நிதி மந்திரி தாக்கல் செய்யும் 14–வது நிதி நிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் பணித் திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கவேண்டும்’ என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.எனவே, இந்த பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் பணித் திறமை அதிகரித்து ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் ஊழியர்களின் பணித் திறமைக்கு ஏற்ப கூடுதல் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்று சம்பள கமிஷன் திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பு பொது பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி