பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதிகுழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் நிர்வாக சங்கத்தின் தலைவர் செல்வமணி, தாக்கல் செய்த மனு: சுயநிதி பாலிடெக்னிக் வகுப்புகளுக்கான கல்வி கட்டணத்தை,தமிழக அரசு, 2002ல் நிர்ணயித்தது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,500 ரூபாய், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 21,700 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. கட்டணத்தை உயர்த்தும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டது; 2003ல், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், கட்டணம் நிர்ணயிக்க பரிசீலிக்கும்படி, கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு, அரசு அறிவுறுத்தியது. ஒற்றைச்சாளர முறையில் வரும் மாணவர்களுக்கு, கட்டணத்தில், 5,000 ரூபாய் சலுகை வழங்கவும், அறிவுறுத்தப்பட்டது. புதிய கட்டண விகிதத்தின்படி, நாங்கள் வசூலித்து வருகிறோம். கடந்த, 2012ல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 'ஆதிதிராவிட மாணவர்களிடம் இருந்து,கட்டணம் வசூலிக்க கூடாது. அந்த கட்டணத்தை, அரசே தரும்' என, கூறியது. புதிய உத்தரவின்படி, கட்டணத்தை தராமல், பழைய கட்டணத்தை அரசு தந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும், 30 ஆயிரம் ரூபாய், கட்டணமாக தர, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ''பாலிடெக்னிக் வகுப்புகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை, அரசு வழங்கும்,'' என்றார். மனுவை விசாரித்த, நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: அரசு நியமித்துள்ள குழுவை, மனுதாரர் சங்கம் அணுக வேண்டும். நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து, நீதிபதி குழுவிடம், மனு அளிக்க வேண்டும். மனு, அளிக்கும்பட்சத்தில், அதை, கட்டண நிர்ணய குழு பரிசீலிக்கும். மனுதாரர் சங்கத்தையும், ஆதிதிராவிடர் நலத் துறைதரப்பையும் கேட்ட பின், தகுதி அடிப்படையில், உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி