PGTRB-2015: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் விழுப்புரம் இளைஞர் தமிழில் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2015

PGTRB-2015: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் விழுப்புரம் இளைஞர் தமிழில் முதலிடம்


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த மாதம் நடைபெற்ற தேர்வில் விழுப்புரம் இளைஞர் தமிழில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,868 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் 10-ம் தேதி தேர்வு நடத்தியது.
தமிழ்நாடு முழுவதும் 499 மையங்களில் சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இறுதிகட்ட தேர்வு முடிவுகளை இணையதளத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மேலும்,சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1:1 என்ற விகிதத்தில் தேர்வானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியலும் வெளி யிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் விடுதி காப்பாளராக பணியாற்றும் ந. பாலு என்பவர் தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர், இந்த தேர்வில் 150-க்கு 112 மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

இவரது சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள ஆவுடையார் குப்பம் கிராமம். மயிலம் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துள்ளார். படிக்கும்போது திண்டிவனத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கலப்பு திருமணப் பிரிவின் கீழ் அரசுப் பணி கிடைத்து விடுதி காப்பாளராக பணியாற்றுகிறார். தற்போது, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் தனது லட்சியம் நிறைவேறியதாக தெரிவித்தார். தமிழில் முதலிடம் பெற்ற பாலு.

23 comments:


  1. நான் 2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றேன். என்னுடைய weightage 63.79%. இங்கிலிஸ் மேஜர், M B c என் வாழ்கையில் எதிர் பார்த்த எதுவும் நடக்க வில்லை. எப்படியும் வேலை கிடைக்கும் என நம்பினேன் ஆனால் விதி விட வில்லை. வேலை கிடைக்கவில்லை. இப்போ நான் ஏரி வேலைக்கு செல்கிறேன் காரணம், ஏற்கனவே பார்த்த பள்ளி கூடத்தில் டெட் வேலை கிடைக்கும் என நம்பி ராஜினாமா செய்தேன். இப்போ யாரும் எனக்கு வேலை தர மறுகிறார்கள். என் குடும்ப சூழ்நிலை ஏரி வேலைக்கு போகிறேன். என் கொடுமை எந்த பட்டதாரி ஆசிரியர்க்கும் வர கூடாது. இந்த நாட்டில் படித்த என்னை போன்ற எத்தனையோ சகோதர சகோதிரிகள் கண்ணீர் விடுகிறார்கள் இந்த டெட் எக்ஸாம் காரணமாக. எங்களை போன்ற ஏழை மக்கள் வாழ முடியுமா என்பதே கேள்விகுறி. யோசிக்காமல் செய்த சிறு தவறல் நானும், என்னை போன்றோரும் எவ்வளவு மன வேதனை அடைத்து இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது. இந்த ஜென்மம் மட்டும் இல்ல இனி எப்போதும் நானும் என்னை போன்றோரும் இந்த WEIGHTAGE சிஸ்டம்தால் அரசு ஆசிரியர் பணிக்கு போக முடியாது. நான் போகிறேன் வாழ வழி யென்றி கண்ணீர் யுடன். ஏரி வேலைக்கு...........

    சங்கர்குமார்
    சின்னத்திருப்பதி
    ஓமலூர்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா கவலைபடாதே இவ்வுலகில் கடவுள் என்பவர் இருக்கிறார் என்றால் நமக்கு உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

      Delete
    2. மண்டல் ஆணைக்குழு சமூக ரீதியாக அல்லது கல்விரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு பரிந்துரை செய்த போது, கீழே குறிப்பிட்ட வாதத்தையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

      மேலும் அது போன்ற ஒதுக்கீடுகளின் நன்மைகளை ஒ.பி.சி.க்களில் ஏற்கனவே மேம்பட்ட நிலையில் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்வர். மேலும் உண்மையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வளம்குன்றிய நிலையிலேயே தொடர்ந்து இருப்பர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

      Delete
    3. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

      Delete
  2. ARGTA BRTE(genuine) brte association meeting was conducted at dindukkal on 7.2.2015 ,There were 322 brtes participated on this from 27 district in tamilnadu ,our state leader mr Rajikumar dindukkal,state gen secretary my Vasudevan villupuram .9443378533

    ReplyDelete
  3. Praba sir Rajesh Kumar sir.... You were waiting for pg welfare list right... ? Have you got it.... !!!

    ReplyDelete
    Replies
    1. I understand that syllabus for pg Engine will be revised for next exam. Can anyone confirms the news'

      Delete
  4. I got 96 marks in pg trb physics..i lost my job with in one mark..if u file a case in physics..contact me..i have a pakka evidence in one physics one question..contact no:8344004313

    ReplyDelete
  5. Hai friends good evening ..
    How is your work going on....
    I give 80% in English this year. I shall reach 88% in public exam..... what about u friends ...

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Hi srimathi sir pls giv ur cel no

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. All subjects First mark score friends pls give ur cell numbers it may useful to others

    ReplyDelete
  9. NOW TRB PUBLISHED CV DATE AND PLACE

    ReplyDelete
  10. Sankar kumar ungalai polave weightage al pathikapatta anaivarathu nilamaiyum,kavalai padathe nitchayam ne arasu paniku selvai, weightage oliyum

    ReplyDelete
    Replies
    1. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி