தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குழந்தை வளர்ச்சிதிட்டஅலுவலர் பதவிக்கான, போட்டித் தேர்வு இன்று நடத்தப்படுகிறது.குழந்தை வளர்ச்சி திட்டத்தில், மாநிலம் முழுவதும், 117 பணியிடங்கள் காலியாக உள்ளது.
பணியிடத்தை நிரப்புவதற்கான, போட்டி தேர்வு இன்று நடக்கிறது. கோவையில், நவஇந்தியாவிலுள்ள, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரியில் போட்டி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மையத்தில், 845 பேர் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மதியம் 2:30 மணி முதல்,4:30 மணி வரை என, இரு கட்டங்களாக தேர்வு நடக்கிறது. தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்டுடன்' அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. சரியான பதிலை தேர்ந்தெடுத்து, 'ஓ.எம்.ஆர்' பேப்பரில் குறியீடுகளை நிரப்பும் முறையில் (அப்ஜெட்டிவ் டைப்) தேர்வு நடக்கிறது. தேர்வு மையத்திற்கு செல்வதற்கு, காந்திபுரம், சிங்காநல்லூர் மற்றும் உக்கடம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி