தொலை தொடர்புக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.09 கோடி லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் உரிமம் ஏலம் இதுவரை இந்த அளவுக்கு நடந்தது இல்லை.தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே இந்த ஏலம் எடுப்பதில் கடும் போட்டிஏற்பட்டது.
இதனால் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 68 சதவீத பிரிமியத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.19 நாட்களாக 115 சுற்றுக்களாக நடந்த இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனல், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடோ போன், டாடா டெலிசர்வீஸ், யுனினார், ஐடியா செல்லுலார், ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்ட காரணத்தால் அவற்றின் ஒட்டு மொத்த கடன் 2½ லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள் வரும் 31–ந்தேதிக்குள் பணத்தை கட்டும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டியுள்ளது.
அடுத்தக்கட்டமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். எனவே கடன் சுமையை குறைக்க செல்போன் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலைக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.செல்போனில் பேசுபவர்களிடம் நிமிடத்துக்கு 5 பைசா முதல் 10 பைசா வரை கூடுதலாக வசூலித்ததால் தான் ஏலம் எடுத்த தொகையை சமாளித்து லாபம் பெற முடியும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
எனவே செல்போன் கட்டணங்கள் ஓரளவு உயரும் என்று தெரியவந்துள்ளது.இதற்கிடையே செல்போன் கட்டணத்தை கடுமையாக உயர்த்தக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார். செல்போன் கட்டணத்தை நிமிடத்துக்கு 1.3 பைசாவுக்கு அதிகமாக உயர்த்தக்கூடாது என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ என்ற புதிய நிறுவனம் வாடிக்கையாளர்களை இழுக்க புதிய சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிகிறது. அதை பொருத்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி