கடல் காற்று வீசாத மாவட்டங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தாண்டும்: வானிலை மையம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2015

கடல் காற்று வீசாத மாவட்டங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தாண்டும்: வானிலை மையம் தகவல்


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம்அடுத்த மாதம்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கிறது.இதுபற்றி வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:–
மேக கூட்டம் இல்லாமல், வானம் தெளிவாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் கடல் காற்று வீசுவதால் வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.ஆனால் மற்ற உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும்.நேற்று சேலத்தில் 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூரில் 100 டிகிரியும், கரூர் பரமத்தி தர்மபுரி மாவட்டங்களில் 99 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.திருச்சியில் 98 டிகிரியும், மதுரையில் 97 டிகிரியும், கோவை, பாளையங்கோட்டையில் 96 டிகிரியும், சென்னையில் 95.36 டிகிரியும் வெயில் பதிவானது.இந்த வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும். அக்னி நட்சத்திரம் சமயத்தில் கடல் காற்று வீசாத உள் மாவட்டங்களில் உச்சகட்டமாக 110 டிகிரி வரை வெயில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி