"நெட்' தேர்வு : விண்ணப்பிக்க மார்ச்.12 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

"நெட்' தேர்வு : விண்ணப்பிக்க மார்ச்.12 கடைசி


கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சிஉதவித்தொகையைப் பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் “ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் - நெட்“தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கல்லூரி பேராசிரியர் பணிக்கும் தேர்வு செய்யப்படுவர்.விளம்பர எண்: .10-2(5)/2015(i)-E.U.Iதகுதி தேர்வு: JRF - NET June 2015.வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். ஜேஆர்எப் பணிக்காக அதிகபட்ச வயதுவரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.நெட் தேர்வுக்கு திகபட்ச வயது வரம்பு கிடையாது.கல்வித்தகுதி: B.E., B.Tech., B.Pharm.,MBBS., ஒருங்கிணைந்த BSMS, M.Sc., படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது மற்றும் ஒபிசி பிரிவினர் 55சதவிகித மதிப்பெண்களுடனும், எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 சதவிகித மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக் தகுதியானவர்கள்.அகில இந்திய அளவில் ஜேஆர்எப் - நெட் 2015 எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அறிவிக்கப்படுவர்.தேர்வு மையங்கள்: பெங்களூர், பவாநகர், போபால், புவனேஸ்வர், சண்டிகார், சென்னை, கொச்சின், புதுதில்லி, குண்டூர், கவுகாத்தி, ஐதராபாத், இம்பால், ஜம்மு, ஜாம்ஷெட்பூர், காரைக்குடி, கொல்கத்தா,லக்னோ, நாக்பூர், பிலானி, புனே, ரெய்ப்பூர், ரூர்கி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்பூர், வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும்.தேர்வு கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஒபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதற்கான செலானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்து இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Controller of Examination,
Examination Unit,
Human Resource Development Group,
CSIR Complex,
Library Avenue,PUSA,
NEWDELHI 110012.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2015.

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.03.2015.

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://www.csirhrdg.res.in/notification_main_june2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

5 comments:

  1. Dear sir/madam,
    Last date extended to march 25.

    ReplyDelete
  2. Dear sir/madam,
    Last date extended to march 25.

    ReplyDelete
  3. உதவி பேராசிரியர் பணிக்கு (2012)தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் எப்போது வரும் ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி