சந்திரயான் - 2 செயற்கைக்கோள் 2017ல் செலுத்த திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2015

சந்திரயான் - 2 செயற்கைக்கோள் 2017ல் செலுத்த திட்டம்

வேலுார்: ''நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக, சந்திரயான் - 2 செயற்கைக்கோள், வரும், 2017ல் விண்ணில் செலுத்தப்படும்,'' என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும், 'இஸ்ரோ' இயக்குனர் சிவகுமார் தெரிவித்தார்.வேலுார் வி.ஐ.டி., பல்கலையில், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக, இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு துவங்கியது.

இதை, 'இஸ்ரோ' செயற்கைக்கோள் மைய இயக்குனர் சிவகுமார் துவக்கி வைத்து பேசியதாவது:

நிகழ்கால மற்றும் எதிர்கால மனித சமுதாய மேம்பாட்டுக்கான அடித்தளமே விண்வெளி ஆராய்ச்சி. இதற்கு வளரும் நாடுகள் செய்யும் முதலீடு, பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.மனித சமுதாயம் சார்ந்த விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு, அரசு முழு ஆதரவும், பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில், 'சந்திரயான்' வெற்றியை தொடர்ந்து, நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக, சந்திரயான்-2 செயற்கைக்கோள், வரும், 2017ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும்.

இதுதவிர, தட்பவெப்ப நிலையை கண்காணிக்கவும், கடல் ஆராய்ச்சி மற்றும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளுக்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைகோள்களை உருவாக்கவும், 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி