2011ல் நியமித்த தமிழாசிரியர்கள் முறைப்படுத்தி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2015

2011ல் நியமித்த தமிழாசிரியர்கள் முறைப்படுத்தி உத்தரவு


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முறையான நியமன உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2010-11ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கென தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேற்கண்ட ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான உத்தரவு வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து அதற்கான சான்றை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி