பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2015

பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங்


கடந்த 2013-14ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்ட உதவியாளர்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து 346 பேர் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வித்துறையில் உதவியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 21ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் கவுன்சலிங் நடக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையபட்டியலின் வரிசை எண்படி கவுன்சலிங் நடக்கும். மேற்கண்ட நபர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அப்போது டிஎன்பிஎஸ்சி வழங்கிய துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி