பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2015

பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு


உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.பறக்கும் படையினரின் கண்காணிப்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்ற நிலையில், சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி மாவட்ட கல்வி ஆய்வாளர் கூறுகையில், “சோனா அர்ஜூன்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாபு சிங் இன்டர் காலேஜில் உள்ள தேர்வு மையத்தில் ஆங்கிலம் முதல் தாளுக்குப் பதிலாக இரண்டாம் தாளுக்கான வினாத்தாளை ஆசிரியர்கள் விநியோகம் செய்துள்ளனர்.

ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கான தேர்வு இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடத்தப்பட வேண்டும்.தவறான வினாத்தாளை கொடுத்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகி மற்றும் 4 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி