அரசுத் தொடக்கப் பள்ளியில் கணினி அறை திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2015

அரசுத் தொடக்கப் பள்ளியில் கணினி அறை திறப்பு




கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கணினி அறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான வசதியைப் பெற வேண்டும் என்ற நோக்கில் "ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் பயிற்சியை அவர்களுக்கு அளிக்கும் விதமாக கணினி அறை அமைத்துத் தர கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள எஸ்.ஆர்.எஃப். நிறுவனம் முன்வந்தது.இதையடுத்து வண்ணச் சுவர்களில் படக்காட்சிகளோடு தனி அறை கட்டப்பட்ட நிலையில் சென்னை ஐ.பி.எம். கணினி நிறுவனத்தின் மூலம் அழகிய வடிவமைப்புடன் கூடிய 7 கணினிகளும், ஒரு கணினிக்கு 2 மாணவர்கள் அமரக்கூடிய இருக்கை வசதியும் செய்துதந்துள்ளது.இந்த கணினி அறையோடு இணைந்து நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எஃப். நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.உதயகுமார் தலைமை வகித்தார். தலைமை மேலாளர் ஆர்.நாகராஜ் வரவேற்றார்.தொழிற்சாலை நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, ஸ்வர்ண பிரகாஷ், ராஜகோபால், டீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோபிகிருஷ்ணா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.எல்.கே.சீனிவாச பெருமாள், கிராம கல்விக் குழுத் தலைவர் இரா.ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி