நாளையுடன் முடிகிறது பிளஸ் 2 தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

நாளையுடன் முடிகிறது பிளஸ் 2 தேர்வு



தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது. மொழிப்பாடங்கள் மற்றும் பெரும்பாலான முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. நாளை உயிரியல், தாவரவியல், கணிதப் பதிவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கான தேர்வுகளுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிகிறது. 

கணினி அறிவியல் மாணவர்களுக்கு, கடந்த வெள்ளிக்கிழமையே தேர்வுகள் முடிந்து விட்டன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தப் பணிகள், தமிழகம் முழுவதும், 73 மையங்களில் நடக்கின்றன. மொழிப்பாடங்களுக்கு பல மையங்களில், திருத்தம் முடிந்து விட்டது.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:முக்கியப் பாடங்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி விட்டது. அதே நேரம், கணிதம், வேளாண் அறிவியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு மட்டும், வினாத்தாளில் பிழைகள், கேள்விகளில் குழப்பம், வினாவிலுள்ள அளவீட்டில் குளறுபடி போன்ற காரணங்களால், 'கீ ஆன்சர்' மற்றும் மதிப்பெண் வழங்கும் விதிகளில் மாற்றம் தேவைப்படுகிறது.வினாத்தாள் தயாரிப்பு கமிட்டி ஆசிரியர்களுடன், கல்வித் துறை அதிகாரிகள் பேசி, 'கீ ஆன்சரில்' திருத்தம் செய்யப்படும்; பிறகே, பிரச்னைக்குரிய பாடங்களுக்கு விடை திருத்தம் துவங்கும். மேலும், கணிதத் தேர்வு நடந்த போது, ஓசூரில் 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள் லீக் ஆனதால், அந்த மாவட்ட விடைத்தாள் கட்டுகளை திருத்துவதா அல்லது ஆய்வுக்கு உட்படுத்துவதா என்றும், முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இப்பாடங்களுக்கான திருத்தம் தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ஆசிரியர் கூறுவது என்ன?

கல்வித்துறை உத்தரவு குறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பில், சரியாக படிக்காத மாணவர்களை, 'பெயில்' செய்வதன் மூலம், தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பில் இடம் பெறுவர். இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். துறையின் புதிய உத்தரவால், கடந்த ஆண்டை விட (2013 - 14), நடப்பு கல்வியாண்டில் (2014 - 15), ஒன்பதாம் வகுப்பில் அதிக மாணவர்கள், 'பெயில்' ஆக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி