பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளிகல்வி இயக்குனர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2015

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளிகல்வி இயக்குனர் தகவல்


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.பள்ளிக்கல்வி துறை இயக்குனர்தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அரக்கோணத்திற்கு வந்தார்.அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கல்வி துறை மூலம் தமிழ்நாட்டில் 150 பள்ளிகளுக்கு கட்டிட வசதி, சுற்றுச்சுவர், ஆய்வகம், நூலகம், குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்க 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் அவர்களது வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.குறிப்பாக மாணவிகள் அதிகமாக படிக்கும் 436 பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பறைவசதி செய்து கொடுக்க ரூ.41 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும்.

பாட புத்தகங்கள்

2015-2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் தொடங்கும் போது 1-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல்வாரத்திலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.2016-2017-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பாடபுத்தகத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட உள்ளது. தேர்வு முடிவுக்கு பின்னர் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

39 comments:

  1. TET case today varutha illaya..... Any one please reply

    ReplyDelete
    Replies
    1. இன்று வழக்கு எத்தனை மணிக்கு வருகிறது

      Delete
    2. Innum one week thalli pogum nu solluranga athu unmaya....

      Delete
    3. TET case hearing akiduchu... i think govt will take time eppo post phone pannirukkangonu theriyala

      Delete
    4. கஷ்டம் தான் ....
      ஒத்திவைப்புகள் தொடரும் .....
      ஏதாவதொரு தீர்ப்பு வரும் ...
      அடுத்த டி இ டி வரும் ...
      .பணியிடம் குறைவாக இருக்கும் ...
      இவ்வளவு பணியிடங்கள் என்று தெரியாமல் எல்லோரும் கனவில் மிதப்போம் ....தமிழக தேர்தல் வரும் .....

      கனவில் மிதந்த கனவான்கள் அனைவரும் "பாதம் பணிந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்து " சும்மா நருக் நருக் என்று ஆட்டு மந்தையை மிஞ்சி குத்துவோம் .....

      கடைசியாக "செலக்‌ஷன் லிஸ்ட்" வந்த பின் தான் தெரியும் ...."
      ஏமாந்த கோணங்கி , கழுதை மூஞ்சி நாற வாய்" யார்  என்று ....
      தயாராவோம் 
      " ஏமாந்த கோணங்கி ,
      கழுதை நாற வாய் " ஆக....

      குனிய குனிய குட்டுபவன் முட்டாளல்ல குட்டுங்கள் நல்லாவே ஓங்கி குட்டுங்கள் என்று குப்புற "காலில் பணிந்ந்ந்ந்து " கிடப்பதே முட்டாள்தனம்....

      Delete
    5. It is no use crying over spilt milk-கொட்டிய பாலை நினைத்து குமறி அழாதே!

      Delete
  2. Ethu nadanthalum udane nadakattum.....

    ReplyDelete
  3. Alex sir do you know TET case details... Please update...

    ReplyDelete
    Replies
    1. TET case hearing akiduchu... i think govt will take time eppo post phone pannirukkangonu theriyala

      Delete
    2. The case has been postponed to two weeks as per the Pallikudam.com WEB

      Delete
    3. அரசு பதில் மனு தாக்கல் செய்து விட்டதா பதில் விவரம் பதிவிடவும்

      Delete
    4. திரு.விஜயகுமார் சார், திரு.அலெக்ஸ் சார், இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்கு ஒத்திவைப்பு.

      நீதிபதி தமிழக அரசு வக்கீலிடம் எதாவது கேட்டாரா? உச்ச நீதிமன்றத்தில் என்னதான் நடந்தது?

      தெரிந்தால் பதிவிடவும்...

      திரு. சதீஷ் குமார் சார் அரசு காலம் விரயம் செய்தால் வழக்கு போட்டவர்களுக்கு சாதகமா தீர்ப்பு வரும் என சொன்னிர்களே? அது நடக்குமா?

      தமிழக அரசு எதாவது பதில் மனு தாக்கல் செய்ததா?

      நண்பர்களே யாராவது தெரிந்தால் பதிவிடவும்.........

      Delete
  4. TET case hearing akiduchu... i think govt will take time eppo post phone pannirukkangonu theriyala

    ReplyDelete
  5. Marupadium postponed a Ada kadaule....

    ReplyDelete
  6. SUPREME COURT CASE THALLUPADI AKUM 5% RELAXATION THODARUM

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr Babu. Please change your name as 'Jothida thilgam Babu'

      Delete
    2. பலபேர் எங்களை பணி நீக்குவோம் என்கிறார்களே அவர்கள் பயெரையும் மாற்றவேண்டும் நண்பரே

      Delete
    3. This is a democratic country. Legally, one can try for anything. Let you / them try in true spirit. I have no problem. I have complaint only against these people who speculate court judgments.

      Delete
    4. உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தாலும் 5% மதிப்பெண் எப்படி தொடரும்? ??

      Delete
    5. Sc tallupadi seithaaal 5%Madurai cortil maru seroivu Manu moolam 5%KEDAIKKUM

      Delete
    6. it no use crying over spilt milk-கொட்டிய பாலை நினைத்து குமறி அழாதே!

      Delete
    7. Mr, shankar G babu babu vai jodhida thilagamunu solreenga, but avar naakkula sani irunthatha maranthu pesittaru..... nogama nombi kumpitarathula evvalavu santhosam...

      Delete
  7. ஓரு வாரத்திற்கு ஒத்திவைப்பு

    ReplyDelete
  8. வேதாளம் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறியது...விடாமுயற்சியை விக்கிரமாதித்தன் தொடர்ந்தான்...கன்னிதீவு கதையும்...தகுதி தேர்வு வழக்கும்...நாதஸ்வரம் தொடரும் ஒரு முடிவுக்கே வராதா?

    ReplyDelete
  9. வேதாளம் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறியது...விடாமுயற்சியை விக்கிரமாதித்தன் தொடர்ந்தான்...கன்னிதீவு கதையும்...தகுதி தேர்வு வழக்கும்...நாதஸ்வரம் தொடரும் ஒரு முடிவுக்கே வராதா?

    ReplyDelete
  10. 2 வாரத்திர்கு ஒத்தி வைப்பு _புதிய தலைமுறை

    ReplyDelete
  11. Tet case maga serial pola mendum after 2 week

    ReplyDelete
  12. first-four weeks then -three weeks now -two weeks next- one week ?..


    .jawuu...mittaaaiii...



    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி