பிளஸ் 2 தமிழ் விடைத்தாள் இன்று 'கலக்கி கட்டும்' பணி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2015

பிளஸ் 2 தமிழ் விடைத்தாள் இன்று 'கலக்கி கட்டும்' பணி!


பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள, மாணவர்களின் தமிழ் தேர்வுகளுக்கானவிடைத்தாள்களை, 'கலக்கிக் கட்டும்' பணிகள் மிகுந்த பாதுகாப்புடன், இன்று துவங்குகின்றன. இப்பணிகள் முழுவதும், சி.சி.,'டிவி' கேமராக்கள் மூலம் பதிவுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன.
தமிழ் பாடத்துக்கான தேர்வுகள் நேற்று முடிந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் கலக்கி, பிரித்து கட்டும் பணிகள் இன்று துவங்கப்படுகிறது.ஒவ்வொரு, தேர்வுக்கு பின்பும், 21 வழித்தட அலுவலர்களின் மூலம், பாதுகாப்புடன் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு, சுங்கம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ் பாடங்களுக்கான இரண்டு விடைத்தாள்கள் மற்றும் இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான,80 ஆயிரம் விடைத்தாள்கள் கலக்கி, பிரித்து கட்டும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகளின் போது, எவ்வித முறைகேடுகளும் நடக்காத வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில், ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இப்பணிகள், நடக்கும் தனியார் பள்ளி வளாகத்தில் அலுவலர்கள் வருவதற்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இப்பணிகள் துவங்குவதற்கு முன்பு முதல், முடியும் வரை அனைத்து பணிகளும் வீடியோ கேமராக்களில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ''93 மையங்களில், தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் கலக்கி, பிரிக்கும் பணிகள் 7ம் தேதி துவங்குகிறது. விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு, கட்டுகளாக வைக்கப்படும்.ஒவ்வொரு கட்டுகளுக்கும் தனிப்பட்ட பதிவு எண் வழங்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக, பிற மாவட்டங்களுக்கு அனுப்ப தயார்நிலையில் வைப்போம். தொடர்ந்து, தலைமை அலுவலர்களின் உத்தரவின்படி, எந்த மாவட்டங்களுக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகின்றதோ, அம்மாவட்டத்துக்கு அனுப்பிவைப்போம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி