மாநில இளைஞர் விருது: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2015

மாநில இளைஞர் விருது: ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்


"முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு' ஏப்ரல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.இதுகுறித்து சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமுதாய வளர்ச்சிக்குச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில்,"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' வழங்கப்படுகிறது.

இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.இந்த விருதுக்கு 15 முதல் 35 வயதுக்கு உள்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர், இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தையும், சென்னை மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தையும் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி