மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வள்ளி, எல்காட் இயக்குனர் அதுல்ஆனந்த், தேர்தல் இணை ஆணையர் அஜய் யாதவ், அதிகாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா பேசியதாவது:–தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் அமைந்துள்ள பொது சேவை மையங்களில் புதிதாக ஆன்லைன் மூலம் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக எவ்வித அலைச்சலும் இல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய கார்டு வழங்கப்படும்.இதன் மூலம் பொதுமக்கள் சிறந்த பயன் அடைவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி