பெங்களூரு: மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், தற்போதுள்ள மாணவர்களையும், ஆசிரியர்களையும் அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றி, ஏழு பள்ளிகளை மூட, பி.பி.எம்.பி., தீர்மானித்துள்ளது.
மர்பி டவுன், பன்னப்பா பார்க், தயானந்தா நகர், பிட்ஸ் காலனி, காட்டன்பேட், காந்தி நகர், சிவாஜி நகர் ஆகிய இடங்களில், பி.பி.எம்.பி., நடத்தும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை, 50க்கும் குறைவாக உள்ளது. பன்னப்பா பார்க் பி.பி.எம்.பி., பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்ன மூர்த்தி கூறுகையில், ''தற்போது, இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை, 32 ஆக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர் எண்ணிக்கை குறைந்துஉள்ளது,'' என்றார்.
பி.பி.எம்.பி., தற்போது தங்கள் நிர்வாகத்தின் கீழ், 89 நர்சரி பள்ளிகள், 13 ஆரம்ப பள்ளிகள், 33 உயர்நிலைப் பள்ளிகள் நடத்துவதோடு, 13 பி.யூ., கல்லூரிகள், நான்கு டிகிரி கல்லூரிகளையும் நடத்தி வருகின்றன. பி.பி.எம்.பி., கல்வி அதிகாரிஹனுமந்தராஜு கூறுகையில், ''மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த ஏழு பள்ளிகளையும், அடுத்த ஆண்டில், பி.பி.எம்.பி., நடத்தும் மற்ற பள்ளிகளுடன் இணைக்க உள்ளோம். கமிஷனர் அனுமதி அளித்தால் மட்டுமே, இந்த பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார். இப்பள்ளிகளை மற்ற பி.பி.எம்.பி., பள்ளிகளுடன்இணைக்கலாம் என்ற யோசனையை, முதன் முதலாக கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைத்த ஆளுங்கட்சி தலைவர் ரமேஷ் கூறியதாவது: பி.பி.எம்.பி., பள்ளிகள் மிகவும் பிரபலமாக இருந்த காலம் உண்டு. தற்போது ஆங்கில பள்ளிகள் பிரபலமாகி வருவதால், நாங்கள் அவைகளுடன் போட்டி போட வேண்டியுள்ளது. கமிஷனர் அனுமதி பெறுவதற்கு முன், பள்ளிகளை இணைப்பதோ அல்லது மூடுவது குறித்தோ கவுன்சிலில் விவாதிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Do n't close any school and any place. we think what is need not and how to apply for our school. so don't close any school in India.
ReplyDelete