நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல், வாசித்தல் மற்றும் எழுதும் திறனை அளவிடும் வகையில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம் அடைவு ஆய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வு, நடப்பு கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு ஜன., மாதம் நடந்தது. 3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு,தமிழ், ஆங்கிலப் பாடங்களில், எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன், கணிதப்பாடத்தில் அடிப்படை கணக்கு குறித்த தேர்வும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதலாக, அறிவியல் பாடத்திலும் தேர்வு நடந்தது. மாணவர்களின் திறனை அளவிடும் நோக்கத்துக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.இதன் முடிவு, கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக, 3, 5 மற்றும் 8ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு, தனித்தனியே சதவீத அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 0-40, 41-60, 61-80, 81-100 என்ற சதவீத அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், 3 மற்றும் 5ம் வகுப்புக்கான அளவிடுதல், பல மாவட்டங்களில் 80 சதவீதத்தை கடந்துள்ளது. அனைத்து மாவட்டத்திலும், 8ம் வகுப்பில் மட்டுமே, தமிழ் பாடத்தை விடுத்து, அதிகபட்சமாக ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பீடு வழங்கப்படவில்லை.
இதன் மூலம் துவக்க நிலையை தவிர, நடுநிலை வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை கல்வித்திறன் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு மாற்றங்களை புகுத்திய பின்னரும், அடிப்படை கல்வியில் மேம்பாடு ஏற்படாதது தெரிகிறது. 8ம் வகுப்பு மாணவர்கள் அடிப்படை கற்றலிலேயே பின்தங்கி இருப்பது,இன்னும் 2 ஆண்டுகளில் பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது.கற்றல் முறையிலான மாற்றத்தை முழுமையாக செயல்படுத்தாததே இதற்கு காரணம். இத்தகைய மாணவர்கள், மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லும்போது, பாடத்திட்டத்தை பின்பற்ற சிரமப்படுவர். இதன் விளைவாகவே, பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும். இப்பிரச்னைக்கு கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Who will take the responsibility????. God only knows.
ReplyDeleteSystem should be changed
ReplyDeletenot only 8th but up to 9th standard students are unable to read and write in both tamil and english. i can prove it. please check all government and aided schools.
ReplyDelete