9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2015

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. செயலாளர் நிலையில் உள்ள அவர்களுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்தியில்,
தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், உணவுப் பொருள் வழங்கல்-நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் என்.முருகானந்தம், தமிழக ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மத்திய அரசுப் பணியில் இருந்து இப்போது விடுப்பிலுள்ள சுப்ரியா சாகு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதன், சமூக நலன்-சத்துணவு திட்டத் துறை செயலாளர் பி.எம்.பஷீர் அஹமது ஆகிய 9 அதிகாரிகள் முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி