கல்வி தொடர்பான அறிக்கைகள் குப்பையில் கிடப்பு: ஐ.ஐ.எஸ்., முன்னாள் இயக்குனர் ஆவேசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

கல்வி தொடர்பான அறிக்கைகள் குப்பையில் கிடப்பு: ஐ.ஐ.எஸ்., முன்னாள் இயக்குனர் ஆவேசம்

''கல்வி தொடர்புடைய அறிக்கை, மசோதாக்களை செயல்படுத்துவதற்கு பதிலாக, அவற்றை, அரசு, குப்பை தொட்டியில் போட்டு வருகிறது,” என, இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குனர் பலராம் கூறினார்.

கர்நாடக மாநில உயர் கல்வி பரிஷத், பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், ஐ.ஐ.எஸ்., - இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குனர் பலராம் பங்கேற்றார்.

ஆர்வம் காட்டுவதில்லை:

அவர் பேசியதாவது: மத்திய, மாநில அரசுகள், வெவ்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து, கல்வி தொடர்பான அறிக்கைகளை செயல்படுத்துவதில், ஆர்வம் காட்டுவதில்லை. மாநில முதல்வருக்கும், உயர்கல்வி துறை அமைச்சருக்கும், கல்வி தொடர்பான பிரச்னையை கேட்பதற்கு மனமோ, பொறுமையோ இல்லை. பல்கலைக் கழகங்களில், தரமான கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தவில்லை. கல்வி தொடர்புடைய அறிக்கை, மசோதாக்களை செயல்படுத்துவதற்கு பதிலாக, அவற்றை, அரசு, குப்பை தொட்டியில் போட்டு வருகிறது இவ்வாறு, அவர் கூறினார்.

தரமான பரிசோதனைகள்:

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி பரிஷத் முன்னாள் தலைவர், மந்தா பேசியதாவது: நாட்டில், ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி மாணவர்கள், பி.யூ.சி., தேர்ச்சி அடைகின்றனர். ஆனால், அவர்களில், 50 லட்சம் பேர் மட்டுமே, பட்டப்படிப்பு படிக்கின்றனர். மீதமுள்ள, 50 லட்சம் பேர், பல்வேறு காரணங்களால், கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பு பெறாமல், தேங்கி விடுகின்றனர். உயர்கல்வியின் தரத்தை, தக்க வைத்து கொள்ள முன்னுரிமை தர வேண்டும். தொழில் கல்விக்கு முக்கியத்துவம் தந்தால் மட்டுமே, மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். அத்துடன், தரமான பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு சென்று கருத்தரங்கு நடத்தினேன். அப்போது, பாட திட்டம், நடைமுறையில் மாற்றம் செய்வது உட்பட, பல ஆலோசனைகள் வந்திருந்தன. இரண்டு நாட்கள் நடக்கும், பல்கலைக்கழகங்கள் தொடர்பான துணைவேந்தர் கருத்தரங்கில், அரசு, அர்த்தமுள்ள ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள தயார்

பரத்லால் மீனா, உயர்கல்வி துறை முதன்மை செயலர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி