ஈரோடு:ஆசிரியர் தகுதி தேர்வில், பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.இம்மாவட்டத்தில் பி.எட்., முடித்து, 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பழங்குடியின பட்டதாரிகளுக்கு,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற வழிவகை செய்ய, முதற்கட்டமாக, சென்னையில் இயங்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு தகுதியுடைய மற்றும் 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பி.எட்., முடித்த பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள், 2015 மார்ச் 23 முதல் 31ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன், பெருந்துறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு, தங்களது பெயரை பதிவுசெய்து கொள்ளுமாறு கலெக்டர் பிரபாகர் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி