'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா': கடுப்பான கல்வி அதிகாரி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா': கடுப்பான கல்வி அதிகாரி


சிவகங்கையில் நடந்த உதவித் தொகை வழங்கும் விழாவில் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, 'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா?' என கடிந்து கொண்டார்.

சிவகங்கையில் தேசிய பசுமைப்படையில் சிறந்து விளங்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.20 ஆயிரம்; உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் விழா நடந்தது. மாநில சுற்றுச்சூழல் துறை சார்பில் 15 பள்ளிகளுக்கு இந்த உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், நிதி உதவியை பெற பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் வரவில்லை. அவர்களுக்கு பதில் உதவியாளர்களே வந்திருந்தனர்.

கடிந்த அதிகாரி:

இதில் கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, ''தலைமை ஆசிரியர்கள் அதிகம்வராதது வேதனை அளிக்கிறது. இது தவறு. எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா. இனி இந்த நிலையை அனுமதிக்க மாட்டேன்,'' என எச்சரித்தார். விழாவில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி