"ஜாகோட்டா" -வை உடைக்க முயற்சி - வதந்திகளை நம்ப வேண்டாம் : ஆதாரங்களுடன் பொதுச் செயலாளர் திரு. செ.ஜார்ஜ் அவர்கள் விளக்கம்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் தலைமையில் போராட்டத்தில் கலந்துக் கொள்ளாத இயக்கங்கள்ஒன்றாக இணைந்து "ஜாகோட்டா" என்ற கூட்டுக் நடவடிக்கைக் குழுவின் மூலமாக 10 -03 -2015 அன்று மாண்புமிகு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும், மாண்புமிகு பள்ளிகல்வி அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சரையும் நேரில் சந்தித்து அனைத்து பிரிவு ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை பரிசீலிப்பதாக அனைவரும் உறுதியும் அளித்துள்ளனர். ஆனால் இதை தாங்கிக்கொள்ள முடியாத சில சங்கங்கள் இந்த "ஜாகோட்டா" என்ற அமைப்பை உடைத்து விட்டதாக 17/03/2015 "தினமலர்" நாளிதழில் ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. இதை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த பொய் செய்தியை கொடுத்துள்ள திரு.குகானந்தம் என்பவருக்கும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - கும் எந்தவித தொடர்பும்இல்லை.திரு.குகானந்தம் அவர்களோ அவரை சார்ந்தவர்களோ இச்சங்க பெயரை பயன்படுத்தக்கூடாது என்று விழுப்புரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 2006 -இல் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இச்சங்கம் விக்கிரவாண்டி திரு.செ.ஜார்ஜ் அவர்களுக்கு சொந்தமானது என்றும் உரிமை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. எனவே பேரவையின் உறுப்பினர்கள் யாரும் இந்த பத்திரிக்கை செய்தியை பார்த்து தடுமாற வேண்டாம் என்றும் பொய் செய்தியை கொடுத்துள்ள திரு.குகானந்தம் அவர்களின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் திரு.குகானந்தம் அவர்களுடன் பேரவை உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது.
இவன்
செ.ஜார்ஜ்,
பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி