ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2015

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து



பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, இரு நாடுகளுக்கும் இடையே தடைப்பட்டுள்ள கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கும், இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்கும் இடையே கப்பல் போக்கு வரத்தை மீண்டும் துவக்குவதற்கான பேச்சு, 13 - 14ம் தேதி, இலங்கையில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவக்குவதற்கான முயற்சிகளில், 'இர்கான் இந்தியா' என்ற, மத்திய அரசின், இந்திய ரயில் கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும். ஏற்கனவே, இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் யாழ்ப்பாணம் இடையே ரயில் போக்குவரத்திற்கான பணிகளில், இர்கான்இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது. தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கப்பல்கள் இயக்கப்படுவதற்காக, மரத்தாலான கட்டுமானம் அமைக்கப்படும். அது போல, ராமேஸ்வரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, தமிழக அரசு அல்லது தமிழக அரசின் உத்தரவின் படி, தனியார் நிறுவனம் மேற்கொள்ளும்.

இதற்கிடையே, தூத்துக்குடி - கொழும்பு இடையே படகு போக்கு வரத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து, இந்திய கப்பல் போக்குவரத்து துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி