பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, மொபைல் போன்களில் இயங்கும் வாட்ஸ் அப் மூலம், வாய்ஸ் கால் (Voice Call) வழியாக, மற்ற தொலைபேசிகளை அழைத்துப் பேசலாம். இதற்கெனத் தனி கட்டணம் தேவை இல்லை.
இந்த வசதியைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போனில், வாட்ஸ் அப் புரோகிராமின் 2.11.528 பதிப்பு, போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் லாலி பாப் பதிப்பு இயங்க வேண்டும். தொடர்ந்து வரும் காலத்தில் மற்ற சிஸ்டங்களுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் போன் சேவை நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ். டூலைப் பயன்படுத்தாமல், இலவசமாகக் கிடைக்கும் வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், போன் அழைப்புகளும் இலவசமாகக் கிடைக்கப் பெற்றால், மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களின் வருமானம் இன்னும் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி