சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியலை விளையாட்டாக கற்று கொள்வது தொடர்பான நேரடியாக செய்து காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தங்கினார்.மாணவி சொர்ணம்பிகா வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் -திருச்சி அண்ணா கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் லெனின் தமிழ் கோவன் மற்றும் பொறியாளர் அகிலன் அறிவியலை நேரடியாக செய்து காண்பித்தலில் முதல் சோதனையாக புவி ஈர்ப்பு விசை அனைவருக்கும் அனைத்து பொருளுக்கும் சமம் என்பதை நோட்டு மற்றும் பேப்பரை வைத்தும் ,அழுத்தம் பரவலாக இருப்பது தொடர்பாக பேப்பர் கப் 10 சமம் ஆக வைத்து அதன் மேல் எழுதும் அட்டையை வைத்து மாணவனை அதனில் ஏறி நிற்க சொல்லி விளக்கியும்,திரவம் விரிவடைய முடியாது என்பதை தண்ணீர் பாக்கெட்டை பென்சில் மூலம் குத்தி அதில் உள்ள ஓட்டையின் வழியாக தண்ணீர் வெளியே செல்லாமல் இருப்பதை கொண்டு எடுத்து கூறியும் ,ஒலி அலைகள் காற்றின் அதிர்வுகள் மூலம் பரவுகிறது என்பதை பறவை விசில் மூலமும்,வெற்றிடத்தை நிரப்புவதற்காக வளிமண்டல அழுத்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முட்டை குடுவைக்குள் எவ்வாறு உள்ளே செல்கிறது என்பதுமூலமும் ,பெர்னௌலி தத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெறும் பையை கொண்டு அதனுள் காற்று ஊத சொல்லி எளிமையாக விளக்கியும்,காற்று தம்பம் அதிர்வு மாறுவதால் ஒலி வித்தியாசபடுதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ட்ரம்பெட் போன்ற இசைக்கருவிகள் மூலமாகவும்,திரவ நைட்ரஜன் பயன்படுத்தி பொருள்களின் இயற்பியல் குணங்களை மாற்றுதல் தொடர்பான உடனடி ஐஸ் செய்தல்,பழத்தை கொண்டு சுத்தியலாக மாற்றி ஆணி அடிப்பது,சாதாரண குழாயை புகை வரும் குழையாக மாற்றி காண்பிப்பது என பல்வேறு நிகழ்வுகளை நேராடியாக செய்துகாண்பித்தனர். பரமேஸ்வரி ,நடராஜன்,சொர்ணம்பிகா,ராஜேஸ்வரி ,தனலெட்சுமி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிகழ்ச்சியினை ஆசிரியை முத்துமீனாள் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் சண்முக பிரியா உட்பட ஏராளமான பெற்றோர்களும்கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் ஆகாஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி