இதே நாளில் அன்று - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2015

இதே நாளில் அன்று

பியர் கியூரியும், அவரது மனைவி மேரி கியூரியும் புற்றுநோயை குணப்படுத்தும் ரேடியத்தை கண்டு பிடித்ததற்காக, 1903ல் நோபல் பரிசை பெற்றனர். பியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்; மேரி, போலந்து நாட்டவர். போலந்தை ரஷ்யர்கள் ஆண்டபோது, அதை எதிர்த்து கிளம்பி எழுந்ததால், மேரியும் போலந்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிரான்சில் அடைக்கலம் புகுந்த மேரி, பியர் கியூரியிடம், 22 வயது மாணவியாக சேர்ந்தார்; பின், அவரையே திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து நோபல் பரிசு பெற்றபின், பியர் காலமானார். கணவரின் இழப்பிற்கு பின்னும், ரேடியம் மற்றும் கதிர் இயக்கம் பற்றி புதியன கண்டுபிடித்து, மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு பெற்றார் மேரி கியூரி. பியர் - மேரி தம்பதியின் மகள் பெயர் ஜூலியட். தாய் மேரி கியூரி இறந்தபின், ஜூலியட், செயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்ததற்காக, 1935ல், நோபல் பரிசு பெற்றார். தோற்றத்தில் தாயை போலவே இருந்த ஜூலியட், தாய், 'லுாகேமியா' எனும் நோயால் இறந்தது போலவே, அதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஜூலியட் நினைவு தினம் இன்று!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி