"தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2015

"தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்"


தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கைதமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு அவர்களை நியமனம் செய்த தேதி முதல் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் தையல் ஓவியம் உடற்கல்வி இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் 16549 பகுதி நேர சிறப்புஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் 2012ம் ஆண்டு நேர்முக தேர்வு மூலம் பணியில் சேர்ந்தனர். தற்போது பள்ளி கல்வித்துறை போட்டி தேர்வு நடத்தி அவர்களை பணி நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது.ஏற்கனவே பள்ளி கல்வித்துறை சில ஆண்டுகளுக்கு முன் போட்டி தேர்வு மூலம் கணினிஆசிரியர்கள் 652 பேரை தேர்வு செய்தது. பின்பு போட்டி தேர்வில் கேள்விகள் சரியானதாக இல்லை எனக்கூறி அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டனர். அவர்களின்வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே ஆசிரியர்களை தகுதி தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி