பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு: அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2015

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் இணைப்பு: அரசு ஊழியர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில், அதற்கான பதிவு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, தலைமைச் செயலர் ஞானதேசிகன், அனைத்து துறை செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்ரல், முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு, தனி எண் தரப்படும். ஒவ்வொரு மாதமும், கருவூலத்திற்கு அனுப்பும் சம்பள பட்டியலில், அந்த எண் குறிப்பிடப்பட வேண்டும். அவ்வாறு எண் பெறாதவர்கள், அந்த எண்ணை பெற்று வழங்குவதற்கான காலக்கெடு, பிப்ரவரியுடன் முடிந்தது. தற்போது, மே மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவர்களின் சம்பள பட்டியல் ஏற்கப்பட்டு,ஊதியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளவர்களுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது. புதிதாக பணியில் சேருவோருக்கும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான, தணி எண் உடனே வழங்கப்படவேண்டும். இது தொடர்பான அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒரு முறை, அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி