குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2015

குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு.


வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில்,குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும்குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த, 2011 - 12ம் நிதியாண்டிலிருந்தே, மத்திய பட்ஜெட்டில், குழந்தைகள்நலன் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதுவரை இல்லாமல், இந்த பட்ஜெட்டில் தான் மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.41 சதவீதமே, குழந்தைகள் நலனுக்காகஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் நலனுக்காக, 58 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய பட்ஜெட்டில், 70 ஆயிரம் கோடி ரூபாயும், 2014ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், 72 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளிக்கல்விக்கு, முந்தைய பட்ஜெட்டில், 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில், 41 ஆயிரம் கோடிரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.சர்வ சிக் ஷா அபியான் எனப்படும் குழந்தைகள் கல்வி பிரிவுக்கு, 28 ஆயிரம் கோடிரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது, 22 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது, 9,200 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

வரும், 2015 - 16ம் ஆண்டு பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் என்ற பிரிவில், தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடு சதவீதம்:
* குழந்தைகள் கல்வி - 79 சதவீதம்
* குழந்தைகள் மேம்பாடு - 15 சதவீதம்
* குழந்தைகள் பாதுகாப்பு - 1.8 சதவீதம்
* குழந்தைகள் ஆரோக்கியம் - 3.0 சதவீதம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி