சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது.
ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் டெபிட் கார்ட் எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பின் கோடு வழங்கப்படும் என்றும், அதனைக்கொண்டு அவர்கள் பணத்தை அனுப்பலாம்.ஆப்பிள் போன் பயனாளர்கள், விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக், தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி