தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை- முக்கிய அம்சங்கள்(updated-12:40AM) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2015

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை- முக்கிய அம்சங்கள்(updated-12:40AM)


தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேரவையில் வெகுவாக பாராட்டிப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.

பட்ஜெட் உரை முக்கிய அம்சங்கள்:

*மாநிலத்தின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டுகளில் உயரவில்லை. இதற்கு பொருளாதார தேக்க நிலையே காரணம்.மத்திய அரசின் உதவிகள் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.உலக பொருளாதார மந்த நிலையில் தமிழகத்துக்கும் பாதிப்பு.14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது.மாநிலங்கள் சொந்த நிதியில் இயங்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது.

*2015-16 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.55,100 கோடி.மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில் ரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

*ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி ஒதுக்கப்படும்.கிராமப்புற வறுமையை ஒழிக்க தகுதியான குடும்பங்கள் கண்டறியும் பணி விரைவில் நிறைவு பெறும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

*மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் காவல்துறை சிறப்பாக பேணி பாதுகாத்து வருகிறது.காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி ஒதுக்கீடு.காவல்துறைக்கு கட்டங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.சிறைத்துறை கட்டமைப்பை மேம்படுத்து ரூ.227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

*சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு நடவடிக்கை.சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி ஒதுக்கீடு.

*தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

*169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

*அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.

*வேளாண் துறைக்கு ரூ.6613.68 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை இல்லாத அளவு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5500 கோடி வழங்க இலக்கு. கடந்த நிதியாண்டைவிட பயிர்க்கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.முறையாக கடன் செலுத்துபவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும்.சாதாரண நெல் குவிண்டால் ரூ.50, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70 மானியம் வழங்கப்படும்.

*கால்நடை பராமரிப்புக்கு முக்கியத்துவம். விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.12,000 கறவைப் பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.புதிதாக 25 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்படும்.கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.

*மீன்வளத் துறைக்கு ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு.

*மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.

*பொது விநியோக திட்டத்தில், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு.உணவு தானிய சந்தை விலை கட்டுப்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*நதி நீர் இணைப்புக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

மின்சாரம்:

மின் துறை தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.24.6.2014 வரை அதிகபட்ச மின் தேவையான, 13,775 மெகாவாட் மின் தேவையை மாநிலம் நிறைவு செய்துள்ளது.புதிய மின் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பித்தக்க மின்சார உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்.

*நெடுஞ்சாலை துறைக்கு ரூ.8828 கோடி நிதி ஒதுக்கீடு.

*வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு.

*டீசல் மானியங்களுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

*மாணவ, மாணவி இலவச பயணத்துக்காக ரூ.480 கோடி ஒதுக்கீடு.

*கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5422 கோடி நிதி ஒதுக்கீடு.

*நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3926 கோடி நிதி ஒதுக்கீடு.குக்கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

*சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தில் மேலும் 60,000 வீடுகள் கட்டப்படும். அதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்.

*ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.சென்னை மாநகர வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

*தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.


*மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு. இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக இயக்கப்படும்.

*ஏழை கர்ப்பிணிப் பெண்கள் நிதியுதவி திட்டத்துக்கு ரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு.

*2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.

*107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.அன்னதான திட்டம் தமிழகம் முழுவதும் மேலும் 206 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

*12,609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்படும்.மேலும் 6.62 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.

*விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

*இலவச மடிக் கணினி திட்டத்துக்கு ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு.சிறுபான்மையினர் நலன் காக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு.

*இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.108 நிதி ஒதுக்கீடு.வரி வருவாயின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது.

*நேரு விளையாட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு 12 கோடி ரூபாயில் விளையாட்டு வளாகம்வரி வருவாயின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது.

புதிய வரி விதிப்பு இல்லை:

புதிய வரிகள் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது.

*மதிப்புக்கூட்டு வரியில் உள்ள 3% உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும்.உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மீதான வரி விலக்கப்படும்.கொசுவலைகளுக்கான மதிப்புக்கூட்டுவரி விலக்கிக் கொள்ளப்படுகிறது.

*ஏலக்காய் மீதான வரி 2% குறைப்புமீன்பிடி கயிறுகள், மிதவைகளுக்கான மதிப்புக்கூட்டு வரி ரத்துசெல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி 14.5%-ல் இருந்து 5% ஆக குறைப்பு.எல்.ஈ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5% ஆக குறைப்புவரிக்குறைப்பு மூலம் அரசுக்கு ரூ.650 கோடி இழப்பு.

*மோட்டார் பங்குகள், உதிரி பாகங்களுக்கான வரி 5% குறைப்பு.வணிக வரி வசூல் இலக்கு ரூ.72,608 கோடி.

தமிழக பட்ஜெட் உரை நிறைவு.

திமுக வெளிநடப்பு
:

சட்டப்பேரவை கூடியதும், பட்ஜெட் உரையை ஒத்திவைத்துவிட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு பேரவை தலைவர் அனுமதி அளிக்காததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அலுவல் ஆய்வுக் குழு:

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

51 comments:

  1. What about education department schemes
    Sairam

    ReplyDelete
  2. Please reply
    Suppose 200 seats are alloted to a particular subject
    Then what formula they will use to segregate this 200 seats into communitywise
    ie oc bc bcm etc
    Anyone pl reply
    Saisubaskar@gmail.com
    Sairam


    ReplyDelete
    Replies
    1. Oc 62
      BC 60 including bcm
      MBC 40
      Sc 36 including scale
      St 3
      All categories include women quota 33%. All categories include Tamil quota 20%. All categories include pH quota 3%
      St

      Delete
    2. @ Shankar G
      sir,
      Tamil Quota means...person studied tamil medium in 10 and 12th
      or including Bachelor degree too..
      pls reply

      Delete
    3. Hi Viji,

      The court has clarified the doubt as follows.

      "A candidate will be eligible for claiming Tamil Medium Quota if he/she has passed/obtained qualifying degree in Tamil"

      No need of verifying SSLC / +2. For example, secondary grade teachers should have studied their D.T.Ed in Tamil Medium. This alone will be taken into consideration.

      Similarly, for a B.T assistant only their UG degree and B.Ed will be considered for quota and no need to worry about their school education and other qualifications.

      Hope this answer is useful to you. Bye.

      Delete
  3. HARI sir 200 post ethuku solrenga ipa nadanthu mudinja pgtrb examku solrengala..2 list vauma

    ReplyDelete
    Replies
    1. Sabari sir nengha cv atten panni kidaikalaya? Endha subject.nanum 2nd listku wait panuren cv atten pani kidaikala

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. TRB Polytechnic Exam eppa varum//
      Anyone from ECE preparing for the exam ?????????????

      Delete
    2. @ easter navis....
      r u frm which dept

      if possible contact me in caarus2011@gmail.com

      Delete
    3. I am from mechanical dept.. my mailid easter.navis@gmail.com

      Delete
    4. i am also from mechanical dept.

      Delete
  5. Pls reply ithu 2 list pgtrb ku quota va

    ReplyDelete
  6. இன்று முக்கிய வழக்கு இறுதி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அமர்வில் வந்ததாகத்தெரிகிறது.

    இன்று மாலைக்குள் அதைப்பற்றியத்தகவல் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    (2010 சான்றிதழ் சரிபார்த்தல் முடிவடைந்தவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று உச்சநீதிமன்றம் சில விளக்கங்களை கேட்டு அவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்கவும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை முடித்துக்கொள்ளவும் அறிவுரித்திருந்தது)

    ReplyDelete
    Replies
    1. pg 2nd list varum

      Delete
    2. விஜய் அவர்களே மொத்தத்தில் பணி வாய்ப்பு மிக கடினம் என்று சொல்லுங்க.

      Delete
    3. உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச் - 30 இல் கோர்ட் எண் 5 ல் வரிசை எண் 9 ஆவதாக இடம் பெற்றுள்ளது.
      கேஸ் எண் 29245/2014

      Delete
  7. Fresh cv list nu podurukanga epdi edupanga pgtrb

    ReplyDelete
  8. Wat about trb asst professor recruitment .any change due to supreme court judgement

    ReplyDelete
    Replies
    1. always the eligiblility criteria at the time of notification is applicable. the SC judgement will be followed in next TRB

      Delete
    2. நேர்காணல் அனைத்து பாடங்களுக்கும் முடிந்த நிலையில் இறுதி பட்டியல் எப்பொழுது வெளிவரும் (16 பாடங்கள் )விபரம் தெரிந்தால் பகிரவும் .

      Delete
  9. Wat abt trb polytechnic exam? How many vacancies will be alloted for english ? And wat is the eligibilty for this?

    ReplyDelete
    Replies
    1. May be next month... Eligibility for English first class master's degree... Don't know about vacancies..

      Delete
    2. Last week Trb office told me... It ll take one month to announce polytechnic trb

      Delete
  10. RPS sir 2 list varumnu epdi solrenga ethum therinja sir

    ReplyDelete
  11. RPS sir 2 list varumnu epdi solrenga

    ReplyDelete
  12. கடந்த வருடம் நிதிதிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி, சரிவர உபயோகிப்பட்டதா? இல்லை அது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறதா????

    ReplyDelete
  13. Plz 2010 cv case full detial. plz updates vijay kumarsir

    ReplyDelete
  14. உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் மார்ச் - 30 இல் கோர்ட் எண் 5 ல் வரிசை எண் 9 ஆவதாக இடம் பெற்றுள்ளது.
    கேஸ் எண் 29245/2014

    ReplyDelete
  15. Stephen sir please send u r number at my mail id murugavel213@gmail.com

    ReplyDelete
  16. இது அம்மா பட்ஜட் Only. not for the common man.

    ReplyDelete
  17. If anybody Willing for mutual transfer from Salem to Coimbatore for BT science subject please contact 9487220060

    ReplyDelete
  18. If anybody Willing for mutual transfer from Salem to Coimbatore for BT science subject please contact 9487220060

    ReplyDelete
  19. If anybody Willing for mutual transfer from Salem to Coimbatore for BT science subject please contact 9487220060

    ReplyDelete
  20. Mr sabari sir give your mobile No

    ReplyDelete
  21. Sir p.g second list podvangala? Vacancy tha fill panni c.v kuptrukanga aprm epdi 2 nd listpossible?
    Sir clear my doubt..

    ReplyDelete
  22. Fresh cv listnu podurukangalae ethathu therinja sir

    ReplyDelete
  23. Fresh cv nu podurukanga apa ethana per kupdurukanganu theril

    ReplyDelete
  24. குற்றவாளி ஜெயலலிதா வெளியே வர மோடியிடம் தமிழக விவசாயிகளை அடகு வைத்து விட்டார்

    ReplyDelete
  25. Sri sabari enna cv list ethulla pottiruku pgtrb second lista please. Reply

    ReplyDelete
  26. Sri sabari enna cv list ethulla pottiruku pgtrb second lista please. Reply

    ReplyDelete
  27. Gokul sir trbla physical director cv a podurukatha parunga..at hula than fresh cv list nu poduruku

    ReplyDelete
    Replies
    1. Sir fresh cv listnu potrukangha bt edhum erundha mathiri elaye. Anyone have that list.

      Delete
  28. Adan therila MAM fresh list cv puthusa podurangalanu

    ReplyDelete
  29. any one know about the pg additional list please comment this side

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி