19 பட்ட படிப்புகளுக்கு விருப்ப பாடத்தேர்வு முறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2015

19 பட்ட படிப்புகளுக்கு விருப்ப பாடத்தேர்வு முறை


தொழிற்கல்வி சார்ந்த விருப்ப பாடத்தேர்வு முறையில், கலை, அறிவியல்கல்லுாரிகளில், 19 பாடங்களை அறிமுகம் செய்ய, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்பட்டு உள்ளன.
மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை, தாங்களே தேர்வுசெய்யும் விருப்பப் பாடத்தேர்வு முறை, பல பல்கலைகளில் அறிமுகமாகி உள்ளது.இதன்படி, ஒரு பட்டப் படிப்பின் அடிப்படை பாடங்களுடன், துணைப் பாடங்களில் (கோர், அலைடு பாடங்கள்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை, தேர்வு செய்து படிக்கலாம்.இதற்கு தர மதிப்பெண் என்ற,' கிரெடிட்' வழங்கப்படும். யு.ஜி.சி., அறிவுறுத்தலின் பேரில், பெரும்பாலான பல்கலைக் கழகங்கள், கல்லுாரிகளில், இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில், சென்னை, பாரதியார் போன்ற பல பல்கலைகளில் இம்முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கென தனி வழிகாட்டுதலையும், யு.ஜி.சி., வெளியிட்டிருக்கிறது.தற்போது கலை, அறிவியல் கல்லுாரிகளில், 19 பாடங்களை, விருப்பப் பாடத்தேர்வு முறைக்கு, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. இதன் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

பி.ஏ., பாஸ் கோர்ஸ், பி.ஏ., ஹானர்ஸ் (வரலாறு, பொருளாதாரம், ஹானர்ஸ் பொருளாதாரம், ஹானர்ஸ் மனோதத்துவவியல் மற்றும் அப்ளைடு மனோதத்துவவியல்), பி.காம்., ஹானர்ஸ், பி.எஸ்.சி., (இயற்பியல், வேதியியல், பிசிக்கல் சயின்ஸ், லைப் சயின்ஸ், ஆந்தோரோபாலஜி (மானிடவியல்), பி.எஸ்.சி., ஹானர்ஸ் (இயற்பியல்,வேதியியல், பயோ மெடிக்கல் சயின்ஸ், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, இயற்பியல், தடயவியல்) ஆகிய படிப்புகளை யு.ஜி.சி., அறிவித்துள்ளது.இப்படிப்புகள் குறித்த கருத்துகளை, ஏப்., 25க்குள் அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி