எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2015

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசு மருத்துவக் கல்லூரியில், 100 மாணவர்களை சேர்க்கவும் முயற்சி நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே மாதம், 10ம் தேதிக்குள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்கவும், முதற்கட்ட கலந்தாய்வை, ஜூன், மூன்றாம் வாரம் நடத்தவும், மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

புது மருத்துவ கல்லூரி?

சென்னை, அரசினர் தோட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரியில், அரசு அறிவித்தபடி, இந்த ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடக்குமா என, கேள்வி எழுகிறது. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. மருத்துவ கவுன்சில் குழு, கடந்த வாரம் ஆய்வு நடத்தி முடித்துள்ளது. விரைவில், அனுமதி கிடைத்து விடும். 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை சேர்க்கும் வகையில், அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி