கோவையில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2015

கோவையில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு


கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முற்றிலும், நிறைவு பெற்றுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 16ம் தேதி துவங்கியது.
கோவை கல்வி மாவட்டத்தில் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கடலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பெண்கள் நகராட்சி பள்ளி என, மூன்று விடைத்தாள் திருத்தும் மையங்களில் மதிப்பீட்டு பணிகள் கடந்த, ஒரு மாத காலமாக நடந்தது. இப்பணிகளில், 3,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2.5 லட்சம் மாணவர்களின் பல்வேறு பாடங்களுக்கான, விடைத்தாள்கள் கோவையில் திருத்தப்பட்டது.பாடவாரியாக மதிப்பெண்கள் குறுந்தகடுகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. இக்குறுந்தகடு, 23ம் தேதி சென்னை தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். மேலும், திருத்தப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நாளை மறுநாள் துவங்கவுள்ளது. இப்பணிகளுக்கு, இரண்டு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொழிப்பாடங்களுக்கு, 1,240 ஆசிரியர்களும், இதர பாடங்களுக்கு, 350 ஆசிரியர்கள் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், 1.60 லட்சம் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள்களும், 1.20 லட்சம் இதர பாடங்களுக்கான விடைத்தாள்களும் திருத்தப்படவுள்ளது. முதல் நாளான, 20ம் தேதி முதன்மை கூர்ந்தாய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் மந்திரபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி