பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2015

பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு


அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ,மாணவியருக்கும்இலவச பொருட்களை வழங்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில் நேற்று நடந்தது. அமைச்சர் வீரமணி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் சுபோத்குமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த 2011-12ம் ஆண்டு முதல் 2014-15ம் கல்வி ஆண்டு வரை பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகள் மற்றும் அந்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், வரும் கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையால் மேற்ெகாள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2015-16ம் கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுகள்,புவியியல் வரைபடங்கள், சீருடைகள் மற்ற நலத்திட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது பாடப்புத்தகங்கள் போய் சேர்ந்துள்ள பள்ளிகளின் விவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி