30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2015

30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?


அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியில் இருந்து, 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதி என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கருவூலகங்களுக்கு, துறை உயர் அதிகாரி அனுப்ப வேண்டும். ஏற்கனவே வழங்கிய உத்தரவு, மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஆறு மாதங்கள், தொடர்ந்து சம்பளம் பெற வேண்டும் எனில், உரிய உத்தரவை, இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனரகம் அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை, சம்பளம் வழங்குவதற்கான உத்தரவு அனுப்பப்படாததால், சம்பள பில்களை, கருவூலகங்களில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது:

ஆறு மாதத்துக்கு ஒரு முறை, வழக்கமாக செய்ய வேண்டிய பணியில் கூட, தாமதத்தை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்று, ஒவ்வொரு முறையும் தாமதம் செய்வதால், திட்ட நிதியில் உள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு செல்ல, ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இப்போது, 'ஆர்டர்' வழங்கினால் கூட, சம்பளம் கிடைக்க, மே, 15 தேதியாகி விடும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி