எழுதுபொருள்-அச்சுத் துறையில் பணி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2015

எழுதுபொருள்-அச்சுத் துறையில் பணி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தேர்வு


எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வெளியிட்ட அறிவிப்பு:
எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கான 8 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 1- ஆம் தேதிய கணினி வழியே நடத்தப்பட்டது. அதில் 432 பேர் பங்கேற்றனர்.விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள்-விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 15- ஆம் தேதியன்று சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும். குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று தனது அறிவிப்பில் சோபனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி