வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2015

வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

மதுரையில் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 28 லட்சம் வசூலித்து ஏமாற்றியதாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள் 2 பேர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம் அன்பு நகரைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி சாந்தி. இவர் உள்ளிட்ட 7 பேர், மதுரை மாநகர் மத்திய குற்றப் பிரிவு போலீஸில் ஒரு புகார் அளித்தனர். அதன் விவரம்:

கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் எங்களது குழந்தைகளின் வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களான மணிமேகலை, கிருஷ்ணன் ஆகியோர் எங்களை அணுகினர். நீங்கள், முறைப்படி வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் வேலை பெற வேண்டுமென்றால் அதிக நாள்களாகும்.

மதுரை மேற்குப் பகுதியைச் சேர்ந்த பிச்சைவேலை எங்களுக்குத் தெரியும். அவரிடம் பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தந்து விடுவார் என்றனர். இதை நம்பிய நாங்கள், பிச்சைவேல் என்பவரிடம் மொத்தம் ரூ. 28.36 லட்சம் கொடுத்துள்ளோம். பணம் வாங்கிய பிறகு வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. எங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தனர்.

இந்த புகாரின்பேரில், மணிமேகலை, சுந்தரி, கிருஷ்ணன், பிச்சைவேல் ஆகியோர் மீது, மதுரை மாநகர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி