கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவை மற்றும் கலப்பு திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இறுதித் தேர்வை நிறுத்தி வைக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்று, கணினி ஆசிரியர் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள, 652 கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,போட்டித் தேர்வு நடத்தியது. இதில், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த, 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு பெறவில்லை. அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தனர். இதனால்,புதிய ஆசிரியர் நியமனப் பணி, பல மாதமாக இழுத்தடிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி, 652 ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி., கடந்த, 20ம் தேதி வெளியிட்டது. ஏப்., 4ம் தேதி (இன்று), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கவுன்சிலிங் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கும் புதிய சிக்கல் எழுந்து உள்ளது.
கணினி ஆசிரியர் நியமனத்தில் விதவைகள் மற்றும் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என, டான் பாஸ்கோ, கீதா, திரிவேணி மற்றும் சோனியா ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை, நீதிபதி சசிதரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அதில், 'மனுதாரர்களுக்கு, நான்கு இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். வரும், 6ம் தேதி, இதுகுறித்து டி.ஆர்.பி., பதிலளிக்கும் வரை, இறுதித் தேர்வை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவால், இன்று, கவுன்சிலிங் நடக்குமா என்று, தேர்வானோர் குழப்பமடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி