தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இந்த உயர்வின் மூலம், ரூ.366 முதல் ரூ.4,620 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும் எனவும், இதனால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள்-ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை அதே ஜனவரி மாதத்தில் இருந்து 6 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வானது உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366 முதல் ரூ.4,620 வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

முன் தேதியிட்டு கிடைக்கும்: அகவிலைப்படியானது கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன் அடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,222.76 கோடி கூடுதல் செலவாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சங்கங்கள் நன்றி: அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் நன்றி தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி