புதிதாக 7461 நர்ஸ்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

புதிதாக 7461 நர்ஸ்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கொண்டுவந்தன. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக பதிலளித்து பேசியதாவது:
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 5,422 டாக்டர்களும், கிராமசெவிலியர்கள், லேப் டெக்னீஷியன், இசிஜி டெக்னீஷியன் என 6,918 பணியாளர்கள், மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு தேர்வு கிடையாது. வாக்-இன் செலெக்ஷன் என்ற முறையில் விரும்புகிற இடத்தை பெற்றுக் கொள்ளும் கலந்தாய்வு திட்டத்தின் மூலம் 32 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 7,461 செவிலியர்களை நியமிக்க அரசு முடிவெடுத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி