பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரம் இடங்கள் காலி அமைச்சர் பழனியப்பன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரம் இடங்கள் காலி அமைச்சர் பழனியப்பன் தகவல்


தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரத்து 415 இடங்கள் காலியாக உள்ளன என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பத்மனாப புரம் உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பழனியப்பன் கூறியதா வது: தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 41, அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் 34, சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 427 என மொத்தம் 502 கல்லூரிகள் உள்ளன.இவற்றில் உள்ள மொத்த இடங்கள் 2 லட்சத்து 3 ஆயிரத்து 200. ஆனால், நடப்பாண்டில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 785 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரசு பாலிடெக்னிக், ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் உட்பட 23 கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் 10 ஆயிரத்து 385 இடங்கள் உள்ள நிலையில் 5 ஆயிரத்து227 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் திருவட்டாறு அருகே ஆனையடியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைக் கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி