விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: பல்கலை ஊழியர்கள் 8 பேர் 'சஸ்பெண்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: பல்கலை ஊழியர்கள் 8 பேர் 'சஸ்பெண்ட்'


அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், விடைத்தாள் மாயமான விவகாரம் தொடர்பாக, ஊழியர்கள், எட்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, 'ஸ்டிராங் ரூமில்' வைத்திருந்த, டம்மி எண் கொடுக்கப்பட்ட விடைத்தாள்கள் திருத்தும் பணி,கடந்த பிப்ரவரி 20ம் நடந்தது. அப்போது, 550 மாணவர்களின் விடைத்தாள்கள்காணாமல் போனது. விசாரணையில், 'டூப்ளிகேட்' சாவி மூலம் ஸ்டிராங் ரூமை திறந்து,கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்து அலுவலக உதவியாளர்களே விடைத் தாள்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அலுவலக உதவியாளர்கள்,சபாநாயகர் தெருவில் நடத்தி வந்த லாட்ஜில் சோதனை நடத்தி, விடைத்தாள்களை பறிமுதல் செய்தனர்.

விடைத்தாள் திருட்டில் ஈடுபட்டதாக, பிரபாகரன், பிரசன்னா, மாரிமுத்து, ஜெயராஜ் உட்பட, எட்டு அலுவலக ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில், தேர்வு கட்டுப்பாட்டுத் துறையில் இருந்த அலுவலகஉதவியாளர்கள் 25 பேர், கொச்சி, பெங்களூரு, சேலம், ஓசூர், நெல்லை, நாகர்கோவில் என, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள் திருட்டு குறித்து, போலீசில் புகார் கொடுக்க, நிர்வாக அதிகாரி சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி