ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக தயாராவது எப்படி: வழிகாட்டுகிறார் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக தயாராவது எப்படி: வழிகாட்டுகிறார் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு"


"உயர் கல்வி படிப்பில் சேரும்போதே மாணவர்கள் தனக்கென இலக்கை ஏற்படுத்திக்கொண்டு படித்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது அவர்களுக்கு தொட்டு விடும் தூரமாக இருக்கும்," என தமிழக கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் 'சிவில் சர்வீசசில் எதிர்காலம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்வி குறித்து சரியான இலக்கை நிர்ணயிக்கவேண்டும். மாணவர்கள் அறிவு ரீதியான தேடுதல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் அதிகம் படிப்பதால் பல்துறை அறிவு வளர்ச்சி ஏற்படும். கல்லூரி காலங்களிலேயே பாட அறிவுடன் வேலைவாய்ப்பிற்கான அறிவுசார்ந்த கூடுதல் தகுதிகளைமாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். விரும்பிய துறையை தேர்வு செய்து ஆர்வத்துடன் படிக்க வேண்டும். இலக்கு நிர்ணயித்து படித்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட 22 பணிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசு பயிற்சி மையங்களில் சேர்ந்து உதவித் தொகையுடன் அடுத்த கட்ட தேர்வுகளை எழுதும் வசதி உள்ளது. மெயின் தேர்வு விரிவாக எழுதும் வகையில் இருக்கும்.தமிழிலும் எழுதலாம். இத்தேர்வை எழுத ஏழ்மை ஒரு தடையாக இருக்காது.

மாணவர்கள் ஆங்கில புலமை பெறுவதுடன் பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளையும் கற்று தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் மாணவி மலாலா, 'என்னை தீவிரவாதிகள் சுட்டுவிட்ட பெண்ணாக பார்க்காமல், மில்லியன் கணக்கில் படிக்காத பெண்களை படிக்க வைக்க போராடும் ஓர் போராளியாக பாருங்கள்' என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாணவரும் அவர் போன்று ஓர் இலக்கை நிர்ணயித்து சமுதாயத்திற்கு பயன்தர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி