TNTET:ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

TNTET:ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை


ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.

கட்டுப்பாடு:

தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவை, ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த காலியிடங்களில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வு முடிவை வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. ஏப்., 16ல் இடைக்காலத் தடை நீக்கப்பட்டு, 70 சதவீத ஆசிரியர்களை, அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முற்றுகை:

ஆனால், இதுகுறித்து, டி.ஆர்.பி., இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, டி.ஆர்.பி., அதிகாரிகளைபார்க்க அழைத்துச் சென்றனர். டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவியை விண்ணப்பதாரர்கள் சந்தித்து, மனு அளித்தனர். அப்போது, 'சட்ட ஆலோசனை பெற்ற பின், வரும் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். இல்லாவிட்டால், வரும், 18ம் தேதி தேர்வர்கள் டி.ஆர்.பி., அதிகாரிகளை சந்திக்கலாம்' என, உறுப்பினர் செயலர் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.'வரும், 15ம் தேதி முடிவை அறிவிக்காவிட்டால், ஆசிரியர்களுடன் இணைந்து தீவிரப் போராட்டம் நடத்துவோம்' என, தேர்வர்களின் பிரதிநிதிகள் ராமநாதபுரம் அன்பரசு மற்றும் திருவண்ணாமலை ரவி தெரிவித்தனர். இந்த முற்றுகையால், டி.ஆர்.பி., வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

68 comments:

  1. டி.ஆர்.பி யின் வேகம்...நமக்கெல்லாம் சோகம்.

    ReplyDelete
    Replies
    1. 10/5/15. Kulla adw list will come. Dont worry friends

      Delete
    2. Sc cut off 69.9 varailum dan nu u solrangale..unmaiya frnds..

      Delete
  2. கடந்த ஏழு மாதங்களாய் தவிக்க விட்டது பத்தாது போல இன்னும் 15நாள் கஷ்டப்படுத்திபாக்க TRBக்கு ஆசை போல...

    ReplyDelete
  3. 15 kkul selec list vidavillaiyendraal 18.05.2015 theevira poraattam nadathuvom...

    ReplyDelete
  4. 15th list varuthu nu secretary avarhale solli vitarhale Nan bare. ....

    ReplyDelete
  5. 15th list varuthu nu secretary avarhale solli vitarhale Nan bare. ....

    ReplyDelete
  6. List publish panna yedhuku 15 days. Worst trb

    ReplyDelete
    Replies
    1. சட்ட ஆலோசனை செய்யனுமாமே...

      Delete
    2. Yennatha ivanga appudi satta aalosanai seiyya porangalam.kaalam kadathum seyal

      Delete
  7. Bt 15th la um varathu num solamal sollitarhale

    ReplyDelete
  8. Viraivil paniyil sera valthukkal senthil anna

    ReplyDelete
  9. Thanks pa..thambi dinakar nalla irukkiyaa pa..

    ReplyDelete
  10. Bt maths tet pass male canditatku aided schoola permanent job edhadhum irundha sollunga frnds. Pg assistant maths for male canditatku edhathum vacant irundha sollunga.

    ReplyDelete
  11. Yennappa aachu pg 2nd list and welfare list.

    ReplyDelete
    Replies
    1. Hello friends
      152 candidates PG Second list prepared last Friday
      may be , Before may 15 th the list will publish
      July month order

      Delete
    2. Wat abt welfare school list sir?

      Delete
    3. Mr.Murali 152 candidates means 10th April CV attend pannavangaka illai puthu addl lists. Pls theliva sollunga. Subject wise.

      Delete
    4. Murali sir ethu welfare schoolka or pallikalvi thuraika

      Delete
    5. Mr.Murali pls reply whether this is for additional list or welfare list. How much posts for each subject.

      Delete
  12. Expected cutoff my weightage 67.8 any chance ?pls reply any one

    ReplyDelete
  13. Replies
    1. nanbare sc womens 50% apdingurapa womensku evalo cutoff varai job kidaikum?apo sc gentsku evalo weightage varaiku job kidaikum?pls reply

      Delete
    2. 70.96லிருந்து தொடங்கி 68ல் மகளிர் கோட்டா முடியும்.

      Delete
  14. om namasivaya namaga

    ReplyDelete
  15. ADW tentative weitage:

    SC Boys:112
    girls : 278
    total :390

    weitage : 68.99

    SCA boys :23
    girls :54
    total :77

    weitage :68.74


    SC+SCA= 467 nos 70% off 669

    selection list will be publised on 08-05-2015

    ALL THE BEST.

    ReplyDelete
  16. எனது டெட் மார்க் 84. சதவிகிதம் 66.94 எனக்கு லிஸ்டில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா ,கண்டுப்பாகா பதில் தரவும் நன்றி

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. Yuvaraj sir sc women 65.83 marks chance iruka please sollunga

    ReplyDelete
  19. நான் எஸ்சி பெண்கள் பிரிவு சார்ந்தவள். எனது டேட் மார்க் 84/150.எனது சதவிகிதம் 66.94%.எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா.

    ReplyDelete
  20. Yuvraj Anna 69.77 female ku chance iruka..pls reply...

    ReplyDelete
  21. Neenga potiruka tentative weightage confirm ah..68 varaikum vara vaipu iruka..

    ReplyDelete
  22. 69.77 sc female Ku chance iruka..pls reply..

    ReplyDelete
  23. yuvaraj sir ipadi pota widow,ex service,disable ellam enga povanga sir

    ReplyDelete
  24. Trbla athuku idaothukidu kidaiyathu.so mela sonna cutoff conform pa.but koncham koraiyalam 68.5 varaik chance iruku.

    ReplyDelete
  25. Yuvaraj sir.....my weitage 70.53....list will be publish may 8 conform ah sir.....reply sir pls

    ReplyDelete
  26. Mr.Murali sir pls give us detailed information for pg 2nd list. Is it true. If yes pls give subject wise approximate vacancy.

    ReplyDelete
  27. When will pk 2nd list will come. Pls tell me.

    ReplyDelete
  28. When will pk list will come. Pls tell me

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  30. Pgtrb 2 list enachu.murali sir 2 list varuvathu unmaya

    ReplyDelete
  31. Last 2014 postingla sc/st/sca evvalavu per posting kidachadhu sumar 200 perukku mattum thane sir

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. Additional list may be will come.....

    ReplyDelete
  34. கல்வி செய்தி சகாக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! கல்வி செய்தியில் கொடுக்க கூடிய comments அனைத்தும் அவரவர் சொந்த சிந்தனையின் அடிப்படையில் கூறப்படுகிறது. அதுவே வேதவாக்கு கிடையாது. ஆகையால் தேவையற்ற யூகங்களை விட்டு விட்டு நடைமுறைக்கு சாத்தியமானவற்றை பற்றி மட்டும் சிந்திங்கள்..! முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தேர்வு பட்டியலை எப்படி வெளியிட வைப்பது என்பதை பற்றி சிந்தியுங்கள் அதனடிப்படையில் செயல்படுங்கள்..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete
  35. Sir thank u very much ungal varthai ovvondrum theiveega varthaigal thank u once again

    ReplyDelete
  36. my name is dharamaraj tet mark 95 weightage 67.01 welfare allotmentla enku job kedaikuma pls tell me

    ReplyDelete
  37. Reply me friends pg 2nd list varuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி