'பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தான் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தோல்வி அடைந்து விட்டது; அதை கலைக்கலாம்' என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயல்பாடுகள்:
நாடு முழுவதும் உள்ள பல்கலை கழகங்கள், அவற்றின் கீழ் உள்ள கல்லூரிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, அவற்றுக்கு தர நிர்ணயம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக, கடந்த 1956ல், பல்கலை மானிய குழு அமைக்கப்பட்டது. பல்கலை கழகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, அரசு பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மானியம் அளிப்பது, யு.ஜி.சி.,யின் முக்கிய பணி.
இந்நிலையில், மத்தியில் பா.ஜ., அரசு அமைந்ததும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சராக, அந்த கட்சியை சேர்ந்த ஸ்மிருதி இரானி பதவியேற்றார். இவர், மானிய குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, யு.ஜி.சி,, முன்னாள் தலைவர் ஹரி கவுதம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
இந்த குழு, தன் பரிந்துரையில் தெரிவித்துள்ளதாவது:
புதிய அமைப்பு:
யு.ஜி.சி., தான் செய்ய வேண்டிய பணிகள் என்னவோ, அவற்றை செய்யத் தவறி விட்டது. அதை மறு சீரமைப்பது அல்லது வேறு மாதிரியாக மாற்றி அமைப்பது என்பது, வீணான காரியம். எனவே, யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, அதற்கு பதிலாக தேசிய உயர்நிலை கல்வி ஆணையத்தை அமைக்க வேண்டும். பார்லி மென்டில் இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். இதற்கான மசோதாவை தயாரிக்க வேண்டும். இந்த புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் வரை, மத்திய மனிதவள அமைச்சகம், நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து, யு.ஜி.சி.,யில் மாற்றங்களை செய்யலாம். யு.ஜி.சி.,யில் பணியாற்றுவோரில் பலர், அதன் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ளனர். இங்கிருந்து வெளியில் சென்றால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இது, அந்த அமைப்பில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளது.யு.ஜி.சி., தலைவர் நாடு முழுவதும் பயணித்து, பல்கலை செயல்பாடுகளை ஆய்வு செய்வதை விட, யு.ஜி.சி., தலைமை அலுவலகத்தில் இருப்பதற்கு தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்.

குறைகள்:
இவ்வாறு, அந்த குழு அளித்துள்ள பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 'யு.ஜி.சி.,யின் செயல்பாடுகளில் உள்ள குறைகள் குறித்து பல தகவல்கள் வந்துள்ளன. அதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்' என்றன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி